Online TestTnpsc Exam
அரசாங்கமும் வரிகளும் Online Test 10th Social Science Lesson 18 Questions in Tamil
அரசாங்கமும் வரிகளும் Online Test 10th Social Science Lesson 18 Questions in Tamil
Congratulations - you have completed அரசாங்கமும் வரிகளும் Online Test 10th Social Science Lesson 18 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
அரசின் வருமானம் கீழ்க்கண்டவற்றுள் எதனைச் சார்ந்து உள்ளது?
நேர்முக வரி | |
மறைமுக வரி | |
a) மற்றும் b) | |
தலா வருமானம் |
Question 1 Explanation:
விளக்கம்:ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றம் அடையச் செய்வதற்கு அரசாங்கத்தால் வரி விதிக்கப்படுகிறது. அரசின் வருமானம் நேர்முக மற்றும் மறைமுக வரிகளைச் சார்ந்து உள்ளது. நேர்முக வரி தனி நபரின் வருமானத்திலும், மற்றும் மறைமுக வரி பண்டங்கள் மற்றும் பணிகள் மீதும் விதிக்கப்படுகின்றன. இதன் மூலம் அரசாங்கம் அதன் “நிதி ஆதாரங்களை” திரட்டுகிறது.
Question 2 |
பாதுகாப்புப் படைகளை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும் பொறுப்பான அரசாங்கம் எது?
மத்திய அரசாங்கம் | |
மாநில அரசாங்கம் | |
மாவட்ட நிர்வாகம் | |
ஐக்கிய நாடுகள் சபை |
Question 2 Explanation:
விளக்கம்: பாதுகாப்பு (அ) இராணுவம் எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது இராணுவத்தின் அத்தியாவசியப் பணியாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு முறைகளில் தரைப்படை, கப்பல்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று சேவைகள் உள்ளது. நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். பாதுகாப்புப் படைகளை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும் மத்திய அரசாங்கமே பொறுப்பானதாகும்.
Question 3 |
நாம் நல்ல பொருளாதார உறவினை பராமரிக்க ஏதுவாக அமைவது?
ஏற்றுமதி | |
இறக்குமதி | |
மூலதனம் மற்றும் உழைப்பு | |
மேற்கண்ட அனைத்தும் |
Question 3 Explanation:
விளக்கம்: அயல்நாட்டுக் கொள்கை இன்றைய உலகில், நாம் அனைத்து உலக நாடுகளுடனும் நட்பான உறவைப் பராமரித்தல் அவசியமானதாகும். உலகஅமைதிக்காக இந்தியா உறுதி ஏற்றுள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதன் மூலமும், மூலதனம் மற்றும் உழைப்பைப் பரிமாற்றம் செய்வதன் மூலமும் நாம் நல்ல பொருளாதார உறவினை பராமரிக்க முடியும். இந்த சேவையை மத்திய அரசாங்கம் வழங்குகிறது.
Question 4 |
உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்தலை நடத்துவது எது?
மத்திய அரசு | |
மாநில அரசு | |
மாவட்ட அமைப்பு | |
பஞ்சாயத்து அமைப்பு |
Question 4 Explanation:
விளக்கம்:அவ்வப்போது தேர்தல்களை நடத்துதல்: இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நாம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்குப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றோம். மத்திய அரசு சட்டங்களையும், நிர்வாக அமைப்புகளையும் உருவாக்கி இந்த இரண்டு சட்ட அமைப்புகளுக்கும் தேர்தல்களை நடத்துகிறது. இதேபோல், மாநில அரசுகள் உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்தலை மாநிலத்திற்குள் நடத்துகிறது.
Question 5 |
அந்தந்த மாநிலங்களில் காவல் துறையை நிர்வகிக்கும் பொறுப்பு யாருடையது?
மத்திய அரசு | |
மாநில அரசு | |
ஆட்சித்துறை | |
சட்டத்துறை |
Question 5 Explanation:
விளக்கம்: சட்டம் மற்றும் ஒழுங்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நமது உரிமைகள், சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும், நமது பொருளாதாரம் மற்றும் சமூகத் தைஒழுங்குபடுத்துவதற்கும் ஏராளமான சட்டங்களை இயற்றுகின்றன. மத்திய அரசு தேசிய, மாநில மற்றும் கீழ் நிலைகளில் உள்ள நீதிமன்றங்களை உள்ளடக்கிய ஒரு துடிப்பான நீதி அமைப்பின்மூலம் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக அமைத்துள்ளது. மேலும், அந்தந்த மாநிலங்களில் காவல் துறையை நிர்வகிக்கும் பொறுப்பை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்கின்றன.
Question 6 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) பொது நிர்வாகம் மற்றும் பொதுப்பண்டங்களை வழங்குதல்: அரசாங்கம் பொதுவாக பல்வேறு துறைகள் மூலம் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் நிர்வகிக்கிறது.
- ⅱ) வருவாய் துறை, பள்ளிகள், மருத்துவமனைகள், கிராம வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி போன்றவைகள் எடுத்துக்காட்டுகளாகும்.
- ⅲ) மத்திய மற்றும் மாநில அரசாங்கத் துறைகளின் அதிகாரவரம்புகளின் பட்டியல் பொதுத் தளத்தில் கிடைக்கிறது.
- ⅳ) உள்ளூர் அரசாங்கங்கள், உள்ளூர் சாலைகள், வடிகால், குடிநீர், குப்பை சேகரிப்பு மற்றும் அகற்றல் போன்ற பொதுப்பண்டங்களை வழங்குகின்றன.
ⅰ), ⅱ), ⅲ), ⅳ) | |
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ) | |
ⅲ), ⅳ) |
Question 6 Explanation:
விளக்கம்: பொது நிர்வாகம் மற்றும் பொதுப்பண்டங்களை வழங்குதல்: அரசாங்கம் பொதுவாக பல்வேறு துறைகள் மூலம் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் நிர்வகிக்கிறது. வருவாய் துறை, பள்ளிகள், மருத்துவமனைகள், கிராம வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி போன்றவைகள் எடுத்துக்காட்டுகளாகும். மத்திய மற்றும் மாநில அரசாங்கத் துறைகளின் அதிகாரவரம்புகளின் பட்டியல் பொதுத் தளத்தில் கிடைக்கிறது. உள்ளூர் அரசாங்கங்கள், உள்ளூர் சாலைகள், வடிகால், குடிநீர், குப்பை சேகரிப்பு மற்றும் அகற்றல் போன்ற பொதுப்பண்டங்களை வழங்குகின்றன.
Question 7 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) அதிக வருமானம் உடையவர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திற்கு அதிகவரி செலுத்தக்கூடிய வகையில் வரி வசூலிக்கப்படுகிறது.
- ⅱ) சில அடிப்படைத் தேவைகளான உணவு, தங்குமிடம், உடை, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மாத வருமானம் போன்றவற்றினை ஏழைகளுக்கு வழங்குவதற்காக அரசாங்கம் பணத்தைச் செலவிடுகின்றது.
- ⅲ) அரசு வரிகளை வசூலிப்பது மற்றும் ஏழைகளுக்கான செலவினைச் செய்வது, அரசு எவ்வாறு வருமானத்தை மறுபகிர்வு செய்கிறது மற்றும் வறுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் போன்றவற்றினை செயல்படுத்துகிறது
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅲ) |
Question 7 Explanation:
விளக்கம்: வருமான மறுபகிர்வு மற்றும் வறுமை ஒழிப்பு: முன்னதாக குறிப்பிடப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க அரசாங்கங்கள் பல்வேறான வரிகளை வசூலிக்கின்றன. அதிக வருமானம் உடையவர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திற்கு அதிகவரி செலுத்தக்கூடிய வகையில் வரி வசூலிக்கப்படுகிறது. சில அடிப்படைத் தேவைகளான உணவு, தங்குமிடம், உடை, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மாத வருமானம் போன்றவற்றினை ஏழைகளுக்கு வழங்குவதற்காக அரசாங்கம் பணத்தைச் செலவிடுகின்றது. மேலும், அரசு வரிகளை வசூலிப்பது மற்றும் ஏழைகளுக்கான செலவினைச் செய்வது, அரசு எவ்வாறு வருமானத்தை மறுபகிர்வு செய்கிறது மற்றும் வறுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் போன்றவற்றினை செயல்படுத்துகிறது.
Question 8 |
கீழ்க்கண்டவற்றுள் வரி என்ற சொல்லின் பொருள் எது?
மதிப்பீடு | |
வரி செலுத்துதல் | |
கட்டணம் | |
அளிப்பு |
Question 8 Explanation:
விளக்கம்: இந்தியாவில் உள்ள அனைத்து அரசாங்கங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மலிவுவிலையில் அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை மக்களுக்கு வழங்குகின்றன. “வரி” என்ற சொல் "வரிவிதிப்பு" எ ன்ப தி லி ரு ந் து உருவானது. இதன் பொருள் மதிப்பீடு என்பதாகும்.
Question 9 |
வரிவிதிப்பு முறை பின்வரும் எந்த கருத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது?
பொருளாதார நலன் | |
மக்கள் நலன் | |
அரசு முன்னேற்றம் | |
லாபம் ஈட்டுதல் |
Question 9 Explanation:
விளக்கம்: வரி விதிப்பு என்பது அரசாங்கம் தனது செலவினங்களுக்காகப் பொது மக்களிடமும், பெரு நிறுவனங்களிடமும் வரிகளை விதித்து வருவாயை உருவாக்கும் ஒரு வழிமுறையாகும். அரசு இயந்திரங்களின் செயல்பாட்டிற்காக வரியின் மூலம் நிதி திரட்டுவது வரிவிதிப்பின் முக்கிய நோக்கமாகும். வரிவிதிப்பு முறை “நல அரசு” என்ற கருத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. தற்கால அரசாங்கங்கள் அதன் எல்லைக்குட்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்குக்கு மட்டுமே கட்டுப்படுவதில்லை. சமீபத்திய ஆண்டுகளில் பொது நிதிக்கு (வரி) முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பெருமளவில் வருவாய் அதிகரித்துள்ளது.
Question 10 |
“வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும் செலுத்துகையாகும்" என்று கூறியவர்?
ஆடம்ஸ்மித் | |
அமர்த்தியாசென் | |
கீன்ஸ் | |
செலிக்மேன் |
Question 10 Explanation:
விளக்கம்: வரிகள் என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்துகின்ற கட்டாய கட்டணமேயாகும். பேராசிரியர் செலிக்மேன் கருத்துப்படி, “வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும் செலுத்துகையாகும். அரசிடமிருந்து எந்தவித நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல் கட்டாயமாகச் செலுத்த வேண்டியதே வரி" என வரையறை கூறுகிறார்.
Question 11 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) வரி விதிப்பு என்பது அரசுக்கு நிதியளிப்பதற்காக வருவாயை உயர்த்துவதையோ அல்லது தேவையை பாதிக்கும் பொருட்டு விலைகளை மாற் றாமல் இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ⅱ) வரலாற்று காலத்திலிருந்தே நாடுகளும் அதற்கு இணையாக செயல்படும் அரசுகளும் வரிவிதிப்பின் மூலம் பெற்ற நிதியிலிருந்தே பல செயல்களை நிறைவேற்றியிருக்கின்றது.
- ⅲ)அவைகளில் சில பொருளாதார உள்கட்டமைப்புச் செலவுகள், இராணுவம், அறிவியல் ஆராய்ச்சி, கலாச்சாரம், கலைகள், பொதுப்பணிகள், பொதுக் காப்பீடுகள் மற்றும் அரசாங்க செயல்பாடுகள் போன்றவைகளாகும்.
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅲ) |
Question 11 Explanation:
விளக்கம்: வரி விதிப்பு என்பது அரசுக்கு நிதியளிப்பதற்காக வருவாயை உயர்த்துவதையோ அல்லது தேவையை பாதிக்கும் பொருட்டு விலைகளை மாற்றுவதையோ நோக்கமாகக் கொ ண்டுள்ளது. வரலாற்று காலத்திலிருந்தே நாடுகளும் அதற்கு இணையாக செயல்படும் அரசுகளும் வரிவிதிப்பின் மூலம் பெற்ற நிதியிலிருந்தே பல செயல்களை நிறைவேற்றியிருக்கின்றது. அவைகளில் சில பொருளாதார உள்கட்டமைப்புச் செலவுகள், (போக்குவரத்து, துப்புரவு, பொது பாதுகாப்பு, கல்வி, உடல்நலம்) இராணுவம், அறிவியல் ஆராய்ச்சி, கலாச்சாரம், கலைகள், பொதுப்பணிகள், பொதுக் காப்பீடுகள் மற்றும் அரசாங்க செயல்பாடுகள் போன்றவைகளாகும்.
Question 12 |
வரிகளை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திறன் எவ்வாறு கூறப்படுகிறது?
நிதித் திறன் | |
வரித்திறன் | |
பொருளாதாரத்திறன் | |
உற்பத்தித்திறன் |
Question 12 Explanation:
விளக்கம்: வரிகளை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திறனை ‘நிதித் திறன்’ என்று கூறப்படுகிறது.
Question 13 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) செலவு, வரி வருவாயை விட குறைவாக இருக்கும்போது ஒரு அரசாங்கம் கடனை திரட்டுகிறது.
- ⅱ) வரிகளின் ஒரு பகுதி கடந்த காலப் பணிகளுக்கான கடன்களுக்குப் பயன்படுத்தப்படலாம்
- ⅲ) அரசாங்கம் மக்களின் நலனிற்கும் பொது சேவைகளுக்கும் வரிகளைப் பயன்படுத்தினர்.
- ⅳ) இந்த சேவைகளில் கல்வி முறைகள், முதியோருக்கான ஓய்வூதியம், வேலையின்மை சலுகைகள் மற்றும் பொது போக்குவரத்து ஆகியவை அடங்கும்
ⅰ), ⅱ), ⅲ), ⅳ) | |
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ), ⅳ) | |
ⅲ), ⅳ) |
Question 13 Explanation:
விளக்கம்: செலவு, வரி வருவாயை விடஅதிகமாக இருக்கும்போது ஒரு அரசாங்கம் கடனை திரட்டுகிறது. வரிகளின் ஒரு பகுதி கடந்த காலப் பணிகளுக்கான கடன்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அரசாங்கம் மக்களின் நலனிற்கும் பொது சேவைகளுக்கும் வரிகளைப் பயன்படுத்தினர். இந்த சேவைகளில் கல்வி முறைகள், முதியோருக்கான ஓய்வூதியம், வேலையின்மை சலுகைகள் மற்றும் பொது போக்குவரத்து ஆகியவை அடங்கும். ஆற்றல், நீர் மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவை மக்களுக்கான பயன்பாடுகளாகும்.
Question 14 |
வரி முறையை வடிவமைப்பதில் முதன்மையானது எது?
சமத்துவம் | |
வருமானம் | |
கல்வி | |
உற்பத்தி |
Question 14 Explanation:
விளக்கம்: சமத்துவ விதி வரி : ஒரு கட்டாயக் கட்டணம் என்பதால், வரி முறையை வடிவமைப்பதில் சமத்துவம் என்பது முதன்மை என்பதை அனைத்து பொருளாதார வல்லுநர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். சமத்துவ கோட்பாடு கூறுகையில், பணக்காரர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாயை செலுத்தவேண்டும், ஏனென்றால் ஏழைகளை விட பணக்காரர்களுக்கு அதிக வரி செலுத்தும் திறன் உள்ளது. மேலும் வரி செலுத்திய பிறகு பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பொருளாதார வேறுபாடு குறைக்கப்படுவதை நாம் காண்போம்.
Question 15 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) ஒவ்வொரு வரி செலுத்துவோரும் ஒரு வருடத்தில் எவ்வளவு வரித்தொகையை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட ஒவ்வொரு அரசாங்கமும் வரி முறையை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும்.
- ⅱ) அரசாங்கம் வரி முறையை அடிக்கடி மாற்றக்கூடாது மற்றும் வரி அமைப்பில் திடீர் மாற்றங்களை அறிவிக்கக் கூடாது.
ⅰ), ⅱ) | |
ⅰ) மட்டும் | |
ⅱ) மட்டும் | |
இரண்டுமில்லை |
Question 15 Explanation:
விளக்கம்: உறுதி விதி: ஒவ்வொரு வரி செலுத்துவோரும் ஒரு வருடத்தில் எவ்வளவு வரித்தொகையை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட ஒவ்வொரு அரசாங்கமும் வரி முறையை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதனால், அரசாங்கம் வரி முறையை அடிக்கடி மாற்றக்கூடாது மற்றும் வரி அமைப்பில் திடீர் மாற்றங்களை அறிவிக்கக் கூடாது.
Question 16 |
ஒரு நபருக்கு வரி செலுத்தப் போதுமான பணம் கிடைக்கும் நேரத்தில் வரி வசூலிக்கப்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிக்கன விதி | |
வசதி வரி | |
உறுதி விதி | |
சமத்துவ விதி |
Question 16 Explanation:
விளக்கம்: சிக்கன மற்றும் வசதி விதி: இந்த இரண்டு விதிகளும் தொடர்புடையவை. வரி செலுத்துவோர் என்ற வகையில், நமது கணக்குகளைச் செயலாக்குவதற்கும் வரி செலுத்துவதற்கும் ஒரு செலவு செய்யப்படுகிறது, எடுத்துக்காட்டாக கணக்காளர்கள் மற்றும் தணிக்கையாளர்களுக்கு சம்பளம் வழங்குதலாகும். இதே போல் அரசாங்கம் தனக்கு வரி செலுத்துவோருக்கு ஊதியத்தினை வழங்கி பெரிய நிறுவனங்களையும் நடத்துகிறது. வரி எளிமையானதாக இருந்தால், வரி வசூலிப்பதற்கான செலவு (வரி செலுத்துவோர் செலவு + வரி வசூலிப்போர் செலவு) மிகக் குறைவாக இருக்கும். மேலும், ஒரு நபருக்கு வரி செலுத்தப் போதுமான பணம் கிடைக்கும் நேரத்தில் வரி வசூலிக்கப்பட வேண்டும். இது வசதிக்கான வரி என்று அழைக்கப்படுகிறது. ஒரு வசதியான வரி, வரி வசூலிக்கும் செலவை குறைக்கிறது.
Question 17 |
நிறைய வரிகளுக்குப் பதிலாக அதிக வரி அதிக வருவாயைப் பெறக் கூடிய சில வரிகளைத் தேர்வு செய்யும் வரிமுறை எது?
சிக்கன விதி | |
உற்பத்தி வரி | |
உறுதி விதி | |
நெகிழ்ச்சி வரி |
Question 17 Explanation:
விளக்கம்: உற்பத்தித் திறன் மற்றும் நெகிழ்ச்சி வரி: அரசாங்கம் போதுமான வரி வருவாயைப் பெறக்கூடிய வரிகளை தேர்வு செய்ய வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதனால், இது நிறைய வரிகளுக்குப் பதிலாக அதிக வரி அதிக வருவாயைப் பெறக் கூடிய சில வரிகளைத் தேர்வு செய்ய வேண்டும். மேலும் அவை ஒவ்வொன்றும் ஒரு சிறிய வரி வருவாயைப் பெறுகின்றன. இது உற்பத்தித் திறன் வரியாகும்.
Question 18 |
மக்கள் வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி வருவாயை செலுத்தும் வகையில் வரி அமைப்பு வடிவமைக்கப்படுதல் எவ்வகை வரியாகும்?
சிக்கன விதி | |
உற்பத்தி வரி | |
உறுதி விதி | |
நெகிழ்ச்சி வரி |
Question 18 Explanation:
விளக்கம்: மக்கள் தங்கள் வருமானத்திலிருந்து வரி செலுத்துகிறார்கள். எனவே, மக்கள் வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி வருவாயை செலுத்தும் வகையில் வரி அமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும். இது நெகிழ்ச்சி வரி எனப்படுகிறது. ஒரு பரந்த பொருளில், பொருளாதாரம் வளர்ந்து வருவதால் மக்களுக்கு அதிக வருமானம் கிடைப்பதன் விளைவாக வரி முறை நெகிழ்ச்சியாக இருந்தால் அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாயையும் செலுத்துவார்கள்.
Question 19 |
கீழ்க்கண்டவற்றுள் வரிவிதிப்பின் நோக்கம் எவை?
- ⅰ) நாணயத்தின் நிலைத்த தன்மையைப் பேணுதல்
- ⅱ) செல்வத்தைப் பகிர்வது தொடர்பான பொதுக் கொள்கையை வெளிப்படுத்துவது
- ⅲ) சில தொழில்கள் அல்லது நெடுஞ்சாலைகள் அல்லது சமூகப் பாதுகாப்பு போன்ற சில பயன்களின் செலவுகளைத் தனிமைப்படுத்துதல்
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅱ), ⅲ) | |
ⅲ) மட்டும் |
Question 19 Explanation:
விளக்கம்: பணத்தை உருவாக்கும் கோட்பாட்டின் ஆதரவாளர்களின் கூற்றுப்படி, கேள்விக்குரிய அரசாங்கத்தால் ஒப்புறுதியளிக்கப்பட்ட பணத்தை வழங்க முடியும்வரை அரசாங்க வருவாய்க்கு வரி தேவையில்லை. வரி விதிப்பின் நோக்கம், நாணயத்தின் நிலைத்த தன்மையைப் பேணுதல், செல்வத்தைப் பகிர்வது தொடர்பான பொதுக் கொள்கையை வெளிப்படுத்துவது, சில தொழில்கள் அல்லது நெடுஞ்சாலைகள் அல்லது சமூகப் பாதுகாப்பு போன்ற சில பயன்களின் செலவுகளைத் தனிமைப்படுத்துதல் போன்றதாகும்.
Question 20 |
நேர்முக வரி என்பது " யார் மீது வரி விதிக்கப்பட்டதோ அவரே அவ்வரியை செலுத்துவதாகும். வரி செலுத்துபவரே வரிச்சுமையை ஏற்க வேண்டும்” என்று கூறியவர் யார்?
ஸ்லீமன் | |
கீன்ஸ் | |
ஜே.எஸ்.மில்லின் | |
வி.கே.ஆர்.வி. ராவ் |
Question 20 Explanation:
விளக்கம்: நேர்முக வரி என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிக்கப்படுவதாகும். இவ்வரியை மற்றவர் மீது புரட்டிவிட முடியாது. பேராசிரியர் ஜே.எஸ். மில்லின் கருத்துப்படி, நேர்முக வரி என்பது “யார் மீது வரி விதிக்கப்பட்டதோ அவரே அவ்வரியை செலுத்துவதாகும். வரி செலுத்துபவரே வரிச்சுமையை ஏற்க வேண்டும்”. சில நேர்முக வரிகள்: வருமான வரி, சொத்து வரி மற்றும் நிறுவன வரி ஆகியனவாகும்.
Question 21 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) வருமான வரி இந்தியாவில் விதிக்கப்படுகின்ற நேர்முக வரி முறையில் மிக முக்கியமான வரியாகும்.
- ⅱ) இவ்வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகின்றது.
- ⅲ) இவ்வரி வசூலிக்கப்படும் விகிதம் வருமான அளவைப் பொறுத்து மாறுபடக்கூடியதாகும்.
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅱ), ⅲ) | |
ⅲ) மட்டும் |
Question 21 Explanation:
விளக்கம்: வருமான வரி இந்தியாவில் விதிக்கப்படுகின்ற நேர்முக வரி முறையில் மிக முக்கியமான வரியாகும். இவ்வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகின்றது. இவ்வரி வசூலிக்கப்படும் விகிதம் வருமான அளவைப் பொறுத்து மாறுபடக்கூடியதாகும்.
Question 22 |
இந்தியாவில் முதன் முதலாக வருமானவரி 1860ஆம் ஆண்டு யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
ஸ்லீமன் | |
கீன்ஸ் | |
ஜே.எஸ்.மில்லின் | |
சர் ஜேம்ஸ் வில்சன் |
Question 22 Explanation:
விளக்கம்: இந்தியாவில் முதன் முதலாக வருமானவரி 1860ஆம் ஆண்டு சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1857ஆம் ஆண்டு கலகத்தின் மூலம் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட அரசாங்கத்தின் மூலம் போடப்பட்ட ஆணையே வரி விதிப்பாகும்.
Question 23 |
இந்தியாவில் அரசாங்கத்தினால் எத்தனை அடுக்குகளில் வரி வசூலிக்கப்படுகிறது?
மூன்று | |
நான்கு | |
இரண்டு | |
ஐந்து |
Question 23 Explanation:
விளக்கம்: இந்தியாவில் அரசாங்கத்தினால் மூன்று அடுக்குகள் வரி வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசால் எளிதில் வசூலிக்கக்கூடிய வரிகள் உள்ளன. இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து நேரடி வரிகளும் மத்திய அரசால் வசூலிக்கப்படுகின்றன. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் வசூலிக்கப்படுகிறது. சொத்துக்களுக்கான வரி உள்ளூர் அரசாங்கங்களால் வசூலிக்கப்படுகிறது.
Question 24 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) இந்தியாவில் மறைமுக வரி களை விட நேரடி வரி மூலம் அதிக வரி வருவாயை வசூலிக்கின்றோம்.
- ⅱ) இந்தியாவின் முக்கிய மறைமுக வரி சுங்க வரி மற்றும் GST ஆகும்.
- ⅲ) பணக்கார நுகர்வோர் ஏழைகளை விட அதிக வரி செலுத்தும் வகையில் அரசாங்கங்கள் வடிவமைக்க முயற்சிக்கின்றன.
- ⅳ) இருப்பினும் ஏழைகள் இன்னும் இந்த வரிகளின் மூலம் அதிக பணம் செலுத்துகிறார்கள்.
ⅰ), ⅱ), ⅲ), ⅳ) | |
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ), ⅳ) | |
ⅲ), ⅳ) |
Question 24 Explanation:
விளக்கம்: இந்தியாவில் நேரடி வரிகளை விட மறைமுக வரி மூலம் அதிக வரி வருவாயை வசூலிக்கின்றோம். இந்தியாவின் முக்கிய மறைமுக வரி சுங்க வரி மற்றும் GST ஆகும். இந்த இரண்டு வரிகளும் வெவ்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொண்டுள்ளன. பணக்கார நுகர்வோர் ஏழைகளை விட அதிக வரி செலுத்தும் வகையில் அரசாங்கங்கள் வடிவமைக்க முயற்சிக்கின்றன. இருப்பினும் ஏழைகள் இன்னும் இந்த வரிகளின் மூலம் அதிக பணம் செலுத்துகிறார்கள். எனவே, நாம் மறைமுக வரிகளைக் குறைத்து நேரடி வரி மூலம் வசூலை அதிகரிக்க வேண்டும் என்று பலர் வாதிடுகின்றனர்.
Question 25 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) வருடாந்திர வரவு செலவுத் திட்டத்தில் வருடத்திற்கு இரு முறை வரி முறையை அறிவிக்கிறோம்
- ⅱ) ஆண்டு நடுப்பகுதியில் வரி மாற்றங்களை அறிவிப்பதன் மூலம் இது மிகவும் அரிதாகவே மீறப்படுகிறது
- ⅲ) இந்திய வரி முறை எல்லாவற்றையும் விட உறுதியான நியதியை கடைபிடிக்கிறது.
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅲ), |
Question 25 Explanation:
விளக்கம்:இந்திய வரிமுறை வரிவிதிப்புக்கான அனைத்து நியதிகளையும் பின்பற்றுகிறது. ஆனால் பெரும்பாலும் சமத்துவக் கொள்கை சமரசம் செய்யப்படுவதாகவும், ஒரு சிலரின் நன்மைக்காக வரி முறையுடன் நாம் சரி செய்யும் போது உற்பத்தித்திறன் இழக்கப்படும் என்றும் வாதங்கள் உள்ளன. வருடாந்திர வரவு செலவுத் திட்டத்தில் வருடத்திற்கு ஒரு முறை வரி முறையை அறிவிக்கிறோம். ஆண்டு நடுப்பகுதியில் வரி மாற்றங்களை அறிவிப்பதன் மூலம் இது மிகவும் அரிதாகவே மீறப்படுகிறது. எனவே, இந்திய வரி முறை எல்லாவற்றையும் விட உறுதியான நியதியை கடைபிடிக்கிறது.
Question 26 |
மூலதன சொத்துக்களின் விற்பனையிலிருந்து வரும் வட்டி இலாபங்கள், தொழில் நுட்ப சேவைகள் போன்றவற்றிலிருந்து வசூலிக்கப்படும் வரி?
செல்வ வரி | |
உற்பத்தி வரி | |
சொத்து வரி | |
நிறுவன வரி |
Question 26 Explanation:
விளக்கம்: நிறுவன வரி: இந்த வரி தங்கள் பங்குதாரர்களிடமிருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகிறது. இது இந்தியாவில் அமைந்துள்ள சிறப்பு உரிமைகளில், மூலதன சொத்துக்களின் விற்பனையிலிருந்து வரும் வட்டி இலாபங்கள், தொழில் நுட்ப சேவைகள் மற்றும் ஈவுத் தொகைகளுக்கான கட்டணம் போன்றவற்றிலிருந்து வசூலிக்கப்படுகிறது. இந்த வரி வெளிநாட்டு நிறுவனங்கள் பெறும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகிறது அல்லது இவ்வரியானது இந்தியாவில் தோன்றுவதாக கருதப்படுகிறது.
Question 27 |
தனது சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படுகின்ற வரி எது?
செல்வ வரி | |
உற்பத்தி வரி | |
சொத்து வரி | |
நிறுவன வரி |
Question 27 Explanation:
விளக்கம்: சொத்து வரி (அ) செல்வ வரி சொத்து வரி (அ) செல்வ வரி என்பது தனது சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படுகின்ற வரியாகும். ஒவ்வொரு ஆண்டும் சொத்தின் நடப்பு சந்தை மதிப்பின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது. இவ்வரி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரியாகும்.
Question 28 |
கீழ்க்கண்டவற்றுள் மறைமுக வரிகளுக்கு எடுத்துக்காட்டு எது?
- ⅰ) முத்திரைத் தாள் வரி
- ⅱ) பொழுதுபோக்கு வரி
- ⅲ) சுங்கத் தீர்வை
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅱ), ⅲ) | |
ⅲ) மட்டும் |
Question 28 Explanation:
விளக்கம்: மறைமுக வரிகள் ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் அது "மறைமுகவரி" எனப்படும். வரி விதிக்கப்பட்டவர் ஒருவர், வரி சுமையை சுமப்பவர் வேறு ஒருவராவார். ஆகையால், மறைமுகவரியில் வரியைச் செலுத்துபவர் வரி சுமையை சுமப்பவர் அல்லர். சில மறைமுக வரிகளாவன: முத்திரைத் தாள் வரி, பொழுதுபோக்கு வரி, சுங்கத் தீர்வை மற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் (GST) மீதான வரிகளாகும்.
Question 29 |
அரசாங்க ஆவணங்கள் மீது விதிக்கப்படுகின்ற வரி எது?
பண்டங்கள் மற்றும் பணிகள் (GST) மீதான வரிகள் | |
சுங்கத் தீர்வை | |
பொழுதுபோக்கு வரி | |
முத்திரைத் தாள் வரி |
Question 29 Explanation:
விளக்கம்: முத்திரைத்தாள் வரி முத்திரைத்தாள் வரி என்பது அரசாங்க ஆவணங்கள் மீது விதிக்கப்படுகின்ற வரிகளான திருமண பதிவு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில ஒப்பந்தப் பத்திரங்கள் போன்றவைகள் மீது விதிக்கப்படுவதாகும்.
Question 30 |
பொழுதுபோக்கு வரி கீழ்க்கண்டவற்றுள் எவற்றுக்கு விதிக்கப்படுகிறது?
- ⅰ) கண்காட்சிகள்
- ⅱ) விளையாட்டு அரங்கம்
- ⅲ) விளையாட்டு நிகழ்ச்சிகள்
- ⅳ) பொழுது போக்கு பூங்காக்கள்
ⅰ), ⅱ), ⅲ), ⅳ) | |
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ) | |
ⅲ), ⅳ) |
Question 30 Explanation:
விளக்கம்: பொழுதுபோக்கு வரி எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும். உதாரணமாக திரைப்படங்கள் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற கட்டணம், பொழுது போக்கு பூங்காக்கள், கண்காட்சிகள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற வரியாகும்.
Question 31 |
உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள எந்தவொரு உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரி எது?
நிறுவன வரி | |
செல்வ வரி | |
சுங்கத்தீர்வை | |
ஏற்றுமதி வரி |
Question 31 Explanation:
விளக்கம்: சுங்கத் தீர்வை (அல்லது) கலால் வரி சுங்கத் தீர்வை என்பது விற்பனையை விட, உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள எந்தவொரு உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரியாகும். இவ்வரி பொதுவாக விற்பனை வரி போன்ற மறைமுக வரிகளுக்கு கூடுதலாக விதிக்கப்படுகிறது.
Question 32 |
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி இந்தியப் பாராளுமன்றத்தில் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
மார்ச் 29, 2017 | |
ஜூலை 1, 2017 | |
ஜூலை 1, 2016 | |
மார்ச் 29, 2018 |
Question 32 Explanation:
விளக்கம்: பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST - Goods and Service Tax) பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும். இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் குறிக்கோள் "ஒரு நாடு-ஒரு அங்காடி-ஒரு வரி" என்பதாகும்.
Question 33 |
கீழ்க்கண்டவற்றுள் பலமுனை வரி எது?
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி | |
மதிப்புக்கூட்டு வரி | |
முத்திரைத்தாள் வரி | |
ஏற்றுமதி வரி |
Question 33 Explanation:
விளக்கம்: GST என்பது, நுகர்வோர் பண்டங்கள் அல்லது பணிகளை வாங்கும் போது விதிக்கப்படும் வரியாகும். இவ்வரி மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் அனைத்து மறைமுக வரிகளையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி மற்றும் வழங்குதல் மீதான வரிகளின்அடுக்கு விளைவுகளை GST நீக்குகிறது.. இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று ‘பல முனை வரி’ இல்லாமல் இது 'ஒரு முனை வரி' ஆகும்.
Question 34 |
வருமானம் அதிகரிக்கும் போது, வரி விகிதமும் அதிகரித்தால் அவ்வரி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வளர்வீத வரி | |
ஆடம்பர வரி | |
விகிதாச்சார வரி | |
ஏற்றுமதி வரி |
Question 34 Explanation:
விளக்கம்: வளர்வீத வரி விதிப்பு முறையில் வரியின் அடிப்படைத் தளம் அதிகரிக்கும்போது (பெருக்கப்படும்) வரி விகிதமும் (பெருகி) அதிகரிக்கிறது. வரி விகிதத்தை வரி அளவுடன் பெருக்குவதன் மூலம் செலுத்த வேண்டிய வரியின் அளவு கணக்கிடப்படுகிறது. ஒரு வளர்வீத வரியைப் பொறுத்த வரையில் பெருக்கல் (வருமானம்) அதிகரிக்கிறது. வருமானம் அதிகரிக்கும் போது, வரி விகிதமும் அதிகரிக்கிறது. இது வளர்வீத வரி விதிப்பு முறை என்று அழைக்கப்படுகிறது.
Question 35 |
மாநில பண்டங்கள் மற்றும் பணிகள் வரி கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது?
- ⅰ)சேவை வரி
- ⅱ) ஆடம்பர வரி
- ⅲ) பரிசுச்சீட்டு வரி
- ⅳ) மதிப்புக் கூட்டு வரி
ⅰ), ⅱ), ⅲ), ⅳ) | |
ⅱ), ⅲ), ⅳ) | |
ⅱ), ⅲ) | |
ⅲ), ⅳ) |
Question 35 Explanation:
விளக்கம்: மாநில பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (SGST): (மாநிலத்திற்குள்) மதிப்புக் கூட்டு வரி (VAT) / விற்பனை வரி, கொள்முதல் வரி, பொழுதுபோக்கு வரி, ஆடம்பர வரி, பரிசுச்சீட்டு வரி, மற்றும் மாநில கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள்.
Question 36 |
மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது?
- ⅰ) சேவை வரி
- ⅱ) ஈடுசெய்வரி
- ⅲ) கல்வி கட்டணம்
- ⅳ) மதிப்புக் கூட்டு வரி
ⅰ), ⅱ), ⅲ), ⅳ) | |
ⅱ), ⅲ), ⅳ) | |
ⅱ), ⅲ) | |
ⅲ), ⅳ) |
Question 36 Explanation:
விளக்கம்: மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (CGST): (மாநிலத்திற்குள்) மத்திய சுங்கத்தீர்வை, சேவை வரி, ஈடுசெய்வரி, கூடுதல் ஆயத்தீர்வை, கூடுதல் கட்டணம், கல்வி கட்டணம் (இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வரி).
Question 37 |
எத்தனை முக்கிய GST விகிதங்கள் உள்ளன?
நான்கு | |
மூன்று | |
ஆறு | |
ஐந்து |
Question 37 Explanation:
விளக்கம்: ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (IGST): (மாநிலங்களுக்கு இடையே) நான்கு முக்கிய GST விகிதங்கள் உள்ளன. 5%, 12%, 18% மற்றும் 28% காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து பண்டங்களுக்கும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.
Question 38 |
ஒரு நிலையான அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் வரி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வளர்வீத வரி | |
ஆடம்பர வரி | |
விகிதாச்சார வரி | |
ஏற்றுமதி வரி |
Question 38 Explanation:
விளக்கம்: விகித வரி விதிப்பு முறை அல்லது விகிதாச்சார வரி விதிப்பு முறை ஒரு நிலையான அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் வரி, விகித வரி விதிப்பு முறை எனப்படுகிறது. அனைத்து வரி செலுத்துவோரும், தங்கள் வருமானத்தில் அதே விகிதத்தில் பங்களிப்பு செய்கின்றனர். இந்த முறையில் வருமானத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் வரி விதிப்பு விகிதம் ஒரே மாதிரியானதாகும். பெறப்பட்ட வரித் தொகை வருமானத்தின் அதே விகிதத்தில் மாறுபடும்.
Question 39 |
அதிக வருமானம் ஈட்டுபவர்களை விட, குறைந்த வருமானம் ஈட்டுபவர்களிடம் அதிகவரி விகிதம் விதிப்பதைக் குறிப்பது எது?
வளர்வீத வரி | |
ஆடம்பர வரி | |
விகிதாச்சார வரி | |
ஏற்றுமதி வரி |
Question 39 Explanation:
விளக்கம்: இது அதிக வருமானம் ஈட்டுபவர்களை விட, குறைந்த வருமானம் ஈட்டுபவர்களிடம் அதிகவரி விகிதம் விதிப்பதைக் குறிக்கிறது. இது வளர்வீத வரி விதிப்பு முறைக்கு நேர் எதிர் மாறானதாகும்.
Question 40 |
வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வரி ஏய்ப்பு | |
வெள்ளை பணம் | |
கருப்பு பணம் | |
செல்வம் |
Question 40 Explanation:
விளக்கம்: கருப்பு பணம் என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும். வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் "கருப்பு பணம்" என்று அழைக்கப்படுகிறது.
Question 41 |
இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பண்டங்கள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு மூலகாரணமாக உள்ளது எது?
வரி ஏய்ப்பு | |
வெள்ளை பணம் | |
கருப்பு பணம் | |
செல்வப்பதுக்கல் |
Question 41 Explanation:
விளக்கம்: கருப்பு பணத்திற்கு பல ஆதாரங்கள் காரணங்களாக அடையாளம் காணப்படுகின்றன. 1. பண்டங்கள் பற்றாக்குறை கருப்பு பணம் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பண்டங்கள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு மூலகாரணமாக உள்ளது. கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்கு அடுத்தடுத்து தடைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
Question 42 |
பின்வரும் எக்காரணத்தினால் கருப்பு பணம் உருவாகிறது?
- ⅰ) கட்டுப்பாட்டு அனுமதி
- ⅱ) ஒதுக்கீடு
- ⅲ) உரிமங்களின் அமைப்பு
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅱ), ⅲ) | |
ⅲ), ⅳ) |
Question 42 Explanation:
விளக்கம்: உரிமம் பெறும் முறை: கட்டுப்பாட்டு அனுமதி, ஒதுக்கீடு மற்றும் உரிமங்களின் அமைப்பு, பொருட்களின் குறைவான அளிப்பினால் தவறான விநியோகத்துடன் தொடர்புடையது என்று உறுதியாக நம்பப்படுகிறது. இதன் விளைவாக கருப்பு பணம் உருவாகிறது.
Question 43 |
கருப்பு பணம் தோன்றுவதற்கு மிக முக்கியமான பங்கு வகிப்பது எது?
தொழில் துறை | |
விவசாயம் | |
சுரங்கம் | |
பணிகள் துறை |
Question 43 Explanation:
விளக்கம்: தொழில் துறையின் பங்கு: கருப்பு பணம் தோன்றுவதற்கு மிக முக்கியமான பங்கு வகிப்பது தொழில் துறையாகும். உதாரணமாக வரையறுக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டாளர் பண்டங்களை மிகவும் குறைவான விலைக்கு வாங்க முயற்சி செய்வதுடன், அப்பொருளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதுடன், அவ்வித்தியாசத்தை தனிப்பட்ட முறையில் காண்பிப்பதில்லை.
Question 44 |
கருப்பு பணம் (வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள்) மற்றும் வரி விதித்தல் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
2015 | |
2016 | |
2012 | |
2018 |
Question 44 Explanation:
விளக்கம்: இந்தியாவில் கருப்பு பணத்தைக் கட்டுப்படுத்த சமீபத்திய சட்ட முயற்சிகள் 1. மாண்புமிகு உச்சநீதி மன்றத்தின் இரண்டு முன்னாள் நீதிபதிகளின் தலைவர் மற்றும் துணை தலைவரின் கீழ் கருப்பு பணம் குறித்த சிறப்பு விசாரணைக் குழு (Special Investigation Team) அமைக்கப்பட்டது. 2. ஒரு விரிவான சட்டத்தை இயற்றுவது – கருப்பு பணம் (வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள்) மற்றும் வரி விதித்தல் சட்டம், 2015.
Question 45 |
பனாமாவில் சமீபத்திய காகித கசிவுகளின் வெளிப்பாடுகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு பின்வருவனவற்றுள் எதனை உள்ளடக்கியது?
- ⅰ) அமலாக்க இயக்குநரகம் (ED
- ⅱ) நிதி புலனாய்வு பிரிவு
- ⅲ) இந்திய ரிசர்வ் வங்கி
- ⅳ) மத்திய நேரடி வரி வாரியம்
ⅰ), ⅱ), ⅲ), ⅳ) | |
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ) | |
ⅲ), ⅳ) |
Question 45 Explanation:
விளக்கம்: பனாமாவில் சமீபத்திய காகித கசிவுகளின் வெளிப்பாடுகளை விசாரிப்பதற்காக மத்திய நேரடி வரி வாரியம் (CBDT), இந்திய ரிசர்வ் வங்கி (RBI), அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் நிதி புலனாய்வு பிரிவு (FIU) ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியலமைப்பு அதிகாரிகளைக் கொ ண்ட பல நிறுவனக் குழு (MAG) அமைக்கப்பட்டது.
Question 46 |
சுத்தமான பணச்செயல்பாடு” (Operation of Money) எப்போது தொடங்கியது?
ஜனவரி 31, 2017 | |
ஜனவரி 21, 2018 | |
ஜனவரி 30, 2016 | |
ஜனவரி 31, 2015 |
Question 46 Explanation:
விளக்கம்: “சுத்தமான பணச்செயல்பாடு” (Operation of Money) ஜனவரி 31, 2017ல் தொடங்கியது. 9. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்.
Question 47 |
ரியல் எஸ்டேட் (ஒழுங்கு முறை மற்றும் மேம்பாடு) சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
2017 | |
2018 | |
2016 | |
2015 |
Question 47 Explanation:
விளக்கம்: ரியல் எஸ்டேட் (ஒழுங்கு முறை மற்றும் மேம்பாடு) சட்டம் 2016
Question 48 |
கருப்பு பணத்திற்கு கடத்தல் ஒரு முக்கிய ஆதாரமாகும்
கடத்தல் | |
பதுக்கல் | |
நிதி | |
சொத்துகுவிப்பு |
Question 48 Explanation:
விளக்கம்: கருப்பு பணத்திற்கு கடத்தல் ஒரு முக்கிய ஆதாரமாகும். இந்தியா கடுமையான பரிமாற்ற முறைகளைக் கொண்டிருந்தபோது விலை உயர்ந்த பொருட்களான தங்கம், வெள்ளி, ஜவுளிகள், மின்னனுப் பொருட்கள் ஆகியவற்றுக்கு சுங்கத் தீர்வை அதிகமாக விதிக்கப்பட்டது. அதிகாரிகளை மீறி இந்தப் பொருட்களைக் கொண்டுவருவது கடத்தலாகும்.வரியின் அமைப்பு: வரி விகிதம் அதிகமாக இருக்கும் போது, கருப்பு பணம் தோன்றக் காரணமாக அமைகிறது.
Question 49 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) தனி நபர்கள் அல்லாமல் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரி ஏய்ப்பு எனப்படும்.
- ⅱ) வரி ஏய்ப்பு பெரும்பாலும் வரி செலுத்துவோர் தங்கள் வரி பொறுப்பைக் குறைக்க வரி அதிகாரிகளிடம் தங்களின் உண்மையான விவகாரங்களை வேண்டுமென்றே தவறாக சித்தரிப்பதை உட்படுத்துகிறது.
- ⅲ), குறைந்த வருமானம், இலாபங்கள் அல்லது ஆதாயங்களை உண்மையில் சம்பாதித்த தொகையை விட அறிவித்தல் அல்லது விலக்குகளை மிகைப்படுத்துதல் போன்ற நேர்மையற்ற வரி அறிக்கையையும் உள்ளடக்கியது.
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅲ) |
Question 49 Explanation:
விளக்கம்: தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரி ஏய்ப்பு எனப்படும். வரி ஏய்ப்பு பெரும்பாலும் வரி செலுத்துவோர் தங்கள் வரி பொறுப்பைக் குறைக்க வரி அதிகாரிகளிடம் தங்களின் உண்மையான விவகாரங்களை வேண்டுமென்றே தவறாக சித்தரிப்பதை உட்படுத்துகிறது. மேலும், குறைந்த வருமானம், இலாபங்கள் அல்லது ஆதாயங்களை உண்மையில் சம்பாதித்த தொகையை விட அறிவித்தல் அல்லது விலக்குகளை மிகைப்படுத்துதல் போன்ற நேர்மையற்ற வரி அறிக்கையையும் உள்ளடக்கியது.
Question 50 |
கீழ்க்கண்டவற்றுள் முறைசாரா பொருளாதாரத்துடன் தொடர்புடைய ஒரு செயல் எது?
வரி ஏய்ப்பு | |
நிதித்திறன் | |
ஆடம்பரம் | |
முதலீடு |
Question 50 Explanation:
விளக்கம்: வரி ஏய்ப்பு என்பது பொதுவாக முறைசாரா பொருளாதாரத்துடன் தொடர்புடைய ஒரு செயலாகும். வரி ஏய்ப்பு அளவின் ஒரு நடவடிக்கை, பதிவு செய்யப்படாத வருமானத்தின் அளவு, வரி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டிய வருமான அளவிற்கும் உண்மையான அறிக்கையிடப்பட்ட தொகைக்கும் உள்ள வித்தியாசமாகும்.
Question 51 |
இந்தியாவில் எத்தனை நிலையிலான அரசாங்கங்கள் மக்கள் மற்றும் சமூகத்தின் நலனுக்காக பல்வேறு செயல்பாடுகளைச் செய்து வருகின்றன?
மூன்று | |
இரண்டு | |
நான்கு | |
ஐந்து |
Question 51 Explanation:
விளக்கம்: வளர்ச்சிக் கொள்கைகளில் அரசாங்கத்தின் பங்கு: இந்தியாவில் மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி ஆகிய மூன்று நிலையிலான அரசாங்கங்கள் மக்கள் மற்றும் சமூகத்தின் நலனுக்காக பல்வேறு செயல்பாடுகளைச் செய்து வருகின்றன. இவற்றின் பணிகள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
Question 52 |
கீழ்க்கண்ட எந்த முகவர்கள் மூலமாக மத்திய அரசு பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகிறது?
- ⅰ) இந்திய பங்குமற்றும் பரிவர்த்தனைவாரியம்
- ⅱ) இந்திய போட்டி ஆணையம்
- ⅲ) இந்திய வர்த்தக நிறுவனம்
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅲ) |
Question 52 Explanation:
விளக்கம்: பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துதல் மத்திய அரசு, பணத்தின் அளிப்பு, வட்டி வீதம், பணவீக்கம் மற்றும் அந்நிய செலாவணி ஆகியவற்றை இந்திய மைய வங்கி மூலம் கட்டுப்படுத்துகிறது. இதன் விகிதங்களில் அதிக ஏற்ற இறக்கங்களை களைவதே மையவங்கியின் முக்கிய நோக்கமாகும். இந்திய பங்குமற்றும் பரிவர்த்தனைவாரியம் (SEBI) மற்றும் இந்திய போட்டி ஆணையம் (CCI) போன்ற பல்வேறு முகவர்கள் மூலமாகவும் மத்திய அரசு பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகிறது.
Question 53 |
கீழ்க்கண்டவற்றுள் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளவை எவை?
- ⅰ) வருமானத்தை குறைத்து மதிப்பிடுதல்
- ⅱ) மறைக்கப்பட்ட பணம்
- ⅲ) விலக்குகள் அல்லது செலவுகளை உயர்த்துவது
- ⅳ) கடல் கடந்த கணக்குகளில் விவரங்களை மறைத்தல்
ⅰ), ⅱ), ⅲ), ⅳ) | |
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅱ), ⅲ) | |
ⅲ), ⅳ) |
Question 53 Explanation:
விளக்கம்: வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளவை வருமானத்தை குறைத்து மதிப்பிடுதல் விலக்குகள் அல்லது செலவுகளை உயர்த்துவது. மறைக்கப்பட்ட பணம். கடல் கடந்த கணக்குகளில் விவரங்களை மறைத்தல்.
Question 54 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) கருப்பு பணத்தின் விளைவாக வரி ஏய்ப்பு மத்திய அரசின் வரி திரட்டல் முயற்சிகளைத் தடுக்கிறது
- ⅱ) நிதிப் பற்றாக்குறை வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்துவதை சிதைக்கிறது
- ⅲ) பொதுச் செலவுகள் தவிர்க்க முடியாததாக இருந்தால், பற்றாக்குறை நிதியுதவியை நாடும்படி அரசாங்கத்தை கட்டாயப்படுத்துகிறது
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅱ), ⅲ) | |
ⅰ), ⅲ) |
Question 54 Explanation:
விளக்கம்: வரி ஏய்ப்பிற்கான காரணங்கள் 1. கருப்பு பணத்தின் விளைவாக வரி ஏய்ப்பு மத்திய அரசின் வரி திரட்டல் முயற்சிகளைத் தடுக்கிறது. நிதிப் பற்றாக்குறை வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்துவதை சிதைக்கிறது மற்றும் பொதுச் செலவுகள் தவிர்க்க முடியாததாக இருந்தால், பற்றாக்குறை நிதியுதவியை நாடும்படி அரசாங்கத்தை கட்டாயப்படுத்துகிறது.
Question 55 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) வரி ஏய்ப்பு, வரி அமைப்பின் சமத்துவப் பண்புகளை குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது
- ⅱ) நேர்மையான வரி செலுத்துவோர் விகிதாசார வரிச்சுமையை விருப்பத்துடன் சுமக்கிறார்கள்
- ⅲ) அவர்களை மனச் சோர்வடையச் செய்து வரி ஏய்ப்பு செய்பவர்களின் முகாமில் சேர ஈர்க்கப்படுகிறார்கள்.
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅱ), ⅲ) | |
ⅲ),ⅰ) |
Question 55 Explanation:
விளக்கம்: இது சேமிப்பு மற்றும் முதலீட்டு முறைகளை சிதைப்பதன் மூலமும், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கான வளங்களின் கிடைக்கும் தன்மையினாலும், அரசாங்கத்தின் அறிவிக்கப்பட்ட பொருளாதா ர க் கொள்கைகளில் தலையிடுகிறது. வரி ஏய்ப்பு, வரி அமைப்பின் சமத்துவப் பண்புகளை குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது. நேர்மையான வரி செலுத்துவோர் விகிதாசார வரிச்சுமையை விருப்பத்துடன் சுமக்கிறார்கள். அவர்களை மனச் சோர்வடையச் செய்து வரி ஏய்ப்பு செய்பவர்களின் முகாமில் சேர ஈர்க்கப்படுகிறார்கள்.
Question 56 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் ஆகியவை நாட்டில் தகுதியற்ற குழுக்களின் கைகளில் பொருளாதார சக்தியைக் குவிப்பதை ஊக்குவிக்கின்றன.
- ⅱ) இது பொருளாதாரத்தை அதன் வழியில் அச்சுறுத்துதலாகும்.
- ⅲ) வரிஏய்ப்பு, வரி நிர்வாகத்தின் நேரத்தினையும், சக்தியினையும் பயன்படுத்தி, வரிஏமாற்றுக்காரர்களின் சிக்கலான கையாளுதல்களைத் தடுக்கிறது.
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅱ), ⅲ) | |
ⅲ),ⅰ) |
Question 56 Explanation:
விளக்கம்: வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் ஆகியவை நாட்டில் தகுதியற்ற குழுக்களின் கைகளில் பொருளாதார சக்தியைக் குவிப்பதை ஊக்குவிக்கின்றன. இது பொருளாதாரத்தை அதன் வழியில் அச்சுறுத்துதலாகும். வரிஏய்ப்பு, வரி நிர்வாகத்தின் நேரத்தினையும், சக்தியினையும் பயன்படுத்தி, வரிஏமாற்றுக்காரர்களின் சிக்கலான கையாளுதல்களைத் தடுக்கிறது.
Question 57 |
வரி ஏய்ப்பு அபாரதங்களில் எத்தனை ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிக அளவு அபராதமும் அடங்கும்?
ஐந்து | |
இரண்டு | |
நான்கு | |
மூன்று |
Question 57 Explanation:
விளக்கம்: வரி ஏய்ப்பும், அபராதமும் :
ஒரு நபர் வரி ஏய்ப்பு செயலை முழுமையாகச் செய்தால், அவர் மோசமான குற்றச்சாட்டுகளை சந்திக்க நேரிடும். வரி ஏய்ப்பு அபாரதங்களில் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிக அளவு அபராதமும் அடங்கும்.
Question 58 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) பிரதிவாதிகள், வழக்கு விசாரணைக்கான செலவுகளைச் செலுத்த உத்தரவிடப்படலாம்.
- ⅱ) பிற வரி ஏய்ப்பு அபாரதங்களில் சமூக சேவை, நன்னடத்தை மற்றும் வழக்கின் சூழ்நிலைகளைப் பொறுத்து மறுசீரமைத்தல் ஆகியவை அடங்கும்.
- ⅲ) வரி ஏய்ப்பு அபராதம், குற்றத்தின் தன்மை, மற்றும் அதன் தீவிரத்தினைப் பொறுத்து கடுமையானதாக இருக்கும்.
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅱ), ⅲ) | |
ⅲ),ⅰ) |
Question 58 Explanation:
விளக்கம்:1. பிரதிவாதிகள், வழக்கு விசாரணைக்கான செலவுகளைச் செலுத்த உத்தரவிடப்படலாம். 2. பிற வரி ஏய்ப்பு அபாரதங்களில் சமூக சேவை, நன்னடத்தை மற்றும் வழக்கின் சூழ்நிலைகளைப் பொறுத்து மறுசீரமைத்தல் ஆகியவை அடங்கும். 3. வரி ஏய்ப்பு அபராதம், குற்றத்தின் தன்மை, மற்றும் அதன் தீவிரத்தினைப் பொறுத்து கடுமையானதாக இருக்கும்.
Question 59 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) வரி என்பது வரி செலுத்துவோர் நேரடி வருவாய் அல்லது நன்மை என்று எதையும் எதிர்பாராமல் அரசாங்கத்திற்குக் கட்டாயமாக செலுத்திடும் கட்டணமேயாகும்.
- ⅱ) பொது நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி மற்றும் பங்கீடு செய்தல் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட வருமானம், நிர்வாக நடவடிக்கையிலிருந்து பெறப்பட்ட வருவாய் ஆகியவை கட்டணங்களில் அடங்காது.
- ⅲ) வரி வருமானம் தவிர்த்து, வரி அல்லாத மூலங்களிலிருந்து பெறக்கூடியவை கட்டணங்கள் ஆகும்
- ⅳ) சில செலுத்துதல்கள், கட்டணங்கள் (Fees), அபராதங்கள், தண்டனைகள் மற்றும் பறிமுதல்கள் ஆகும்.
ⅰ), ⅱ), ⅲ), ⅳ) | |
ⅰ), ⅲ), ⅳ) | |
ⅱ), ⅲ) | |
ⅲ), ⅳ) |
Question 59 Explanation:
விளக்கம்: வரி என்பது வரி செலுத்துவோர் நேரடி வருவாய் அல்லது நன்மை என்று எதையும் எதிர்பாராமல் அரசாங்கத்திற்குக் கட்டாயமாக செலுத்திடும் கட்டணமேயாகும். பொது நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி மற்றும் பங்கீடு செய்தல் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட வருமானம், நிர்வாக நடவடிக்கையிலிருந்து பெறப்பட்ட வருவாய் ஆகியவை கட்டணங்களில் அடங்கும். வரி வருமானம் தவிர்த்து, வரி அல்லாத மூலங்களிலிருந்து பெறக்கூடியவை கட்டணங்கள் ஆகும். சில செலுத்துதல்கள், கட்டணங்கள் (Fees), அபராதங்கள், தண்டனைகள் மற்றும் பறிமுதல்கள் ஆகும்.
Question 60 |
கீழ்க்கண்டவற்றுள் எது மறைமுக வரி?
ஆயத்தீர்வை | |
தனிநபர் வருமானவரி | |
நிறுவனவரி | |
கட்டணங்கள் |
Question 60 Explanation:
விளக்கம்:வளங்களைத் திரட்டுதல் வரிவிதிப்பு அரசாங்கத்திற்கு கணிசமான அளவிற்கு வருவாய் திரட்டுவதற்கு உதவுகிறது. குறிப்பாக நேர்முக வரிமுறையான தனிநபர் வருமானவரி, நிறுவனவரி மற்றும் மறைமுக வரிகளான ஆயத்தீர்வை, சுங்கவரி ஆகியவற்றின் மூலமாக வரி வருவாய் திரட்டப்படுகிறது.
Question 61 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) வரியின் மூலம் சமத்துவமுறையை உருவாக்கலாம்.
- ⅱ)குறிப்பாக, நேர்முக வரியில் வளர்வீத வரி முறை பின்பற்றப்படுகிறது.
- ⅲ) அதேபோல சில மறைமுக வரியான ஆடம்பரப்பண்டங்களின் மீது விதிக்கப்படும் வரி வளர்வீத வரியின் தன்மையுடையதாகும்.
ⅰ), ⅱ), ⅲ) | |
ⅰ), ⅱ) | |
ⅱ), ⅲ) | |
ⅲ),ⅰ) |
Question 61 Explanation:
விளக்கம்: வருமான ஏற்றதாழ்வுகளை குறைத்தல்: வரியின் மூலம் சமத்துவமுறையை உருவாக்கலாம். குறிப்பாக, நேர்முக வரியில் வளர்வீத வரி முறை பின்பற்றப்படுகிறது. அதேபோல சில மறைமுக வரியான ஆடம்பரப்பண்டங்களின் மீது விதிக்கப்படும் வரி வளர்வீத வரியின் தன்மையுடையதாகும். சமூக நலன் வரி விதிப்பு சமூக நலனை உருவாக்குகிறது. சில விரும்பத்தகாத பொருட்களான மதுபானங்கள் போன்ற பொருட்களின் மீது அதிகமாக வரி விதிப்பதன் மூலம் சமூக நலன் பாதுகாக்கப்படுகிறது.
Question 62 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) அந்நியச் செலாவணி வரிவிதிப்பு ஏற்றுமதியை ஊக்குவிப்பதுடன் இறக்குமதியைத் தடுக்கிறது
- ⅱ) பொதுவாக, வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளும் ஏற்றுமதி பொருட்களுக்கு வரிகளை விதிப்பதில்லை.
ⅰ), ⅱ) சரி | |
ⅰ) மட்டும் | |
ⅱ) மட்டும் | |
ⅰ),ⅱ)தவறு |
Question 62 Explanation:
விளக்கம்: அந்நியச் செலாவணி வரிவிதிப்பு ஏற்றுமதியை ஊக்குவிப்பதுடன் இறக்குமதியைத் தடுக்கிறது. பொதுவாக, வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளும் ஏற்றுமதி பொருட்களுக்கு வரிகளை விதிப்பதில்லை.
Question 63 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
- ⅰ) வரி என்பது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகளுள் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது.
- ⅱ) அரசாங்கம் பண்டங்கள் மீதான வரி விகிதத்தை குறைப்பதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
ⅰ), ⅱ) சரி | |
ⅰ) மட்டும் | |
ⅱ) மட்டும் | |
ⅰ),ⅱ)தவறு |
Question 63 Explanation:
விளக்கம்: விளக்கம்:வட்டார முன்னேற்றம்: வட்டார வளர்ச்சியில் வரி விதிப்பு முக்கியப் பங்கினை வகிக்கிறது. பின் தங்கிய பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்காக வரிச் சலுகையையும், வரி விலக்குகளையும் அளிப்பதன் மூலம், அப்பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு வணிக நிறுவனங்களைத் தூண்டுகிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல் வரி என்பது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகளுள் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. அரசாங்கம் பண்டங்கள் மீதான வரி விகிதத்தை குறைப்பதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
Question 64 |
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
- ⅰ) வரி என்பது எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அரசாங்கத்திற்கு கட்டாயமாக செலுத்துகின்ற செலுத்துகையாகும்.
- ⅱ) வரி என்பது ஒரு குறிப்பிட்ட நன்மைகளுக்கான தனிச் சலுகைகளைப் பெற்றிருந்தாலும், பொது நல ஒழுங்கு முறையின் சிறப்பான முதன்மை நோக்கமாகும்.
- ⅲ) ஒரு தனிப்பட்ட நபரின் மீது வரி விதிக்கப்பட்டால், அதனை அவர் செலுத்த வேண்டும். இல்லையெனில் அவர் தண்டிக்கப்படுவார்.
ⅰ), ⅱ) தவறு | |
ⅰ) மட்டும் | |
ⅱ) மட்டும் | |
இரண்டுமில்லை |
Question 65 |
கீழ்க்கண்டவற்றுள் விகித வரி விதிப்புக்கு எடுத்துக்காட்டு எது?
நிறுவன வரி | |
வருமான வரி | |
விற்பனை வரி | |
முத்திரைத்தாள் வரி |
Question 66 |
வரவு செலவு திட்டம் 2019 - 2020 இன் படி அதிக வரவு கொண்ட துறை எது?
வருமான வரி | |
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி | |
சுங்க வரி | |
மத்திய கலால் வரி |
Question 67 |
வரவு செலவு திட்டம் 2019 - 2020 இன் படி அதிக அரசு செலவினம் எது?
வட்டி செலுத்துதல் | |
மானியங்கள் | |
பாதுகாப்பு | |
மாநில பங்கின் வரி மற்றும் கடமைகள் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 67 questions to complete.