Online TestTnpsc Exam
இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு Online Test 9th Social Science Lesson 8 Questions in Tamil
இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு Online Test 9th Social Science Lesson 8 Questions in Tami
Congratulations - you have completed இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு Online Test 9th Social Science Lesson 8 Questions in Tami.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பொருளியல் செயல்பாடுகளில் மேல்நிலையில் அலுவலர்களாகவும் மற்றும் கீழ்நிலையில் தொழிலாளர்களாகவும் பங்குபெறுவோர் ____________ எனப்படுவர்.
உழைப்பாளர் குழு | |
பணியமர்த்துவோர் | |
ஊழியர் | |
விவசாயிகள் |
Question 1 Explanation:
(குறிப்பு: இந்த ஊழியர்களைப் பணியமர்த்தி, அவர்களின் பணிக்கு ஊதியம் தருவோரை, பணியமர்த்துவோர் என்று குறிப்பிடுவர்.)
Question 2 |
உழைப்பாளர் குழுவைக் கணக்கிடுவதில் __________ வயது வரை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள்.
12 – 58 | |
15 – 58 | |
12 – 60 | |
15 – 60 |
Question 2 Explanation:
(குறிப்பு: உழைப்பாளர் குழு என்பது நாட்டு மக்களில் வேலையில் இருப்போரும், கூடவே வேலை செய்யும் திறன் பெற்ற நபர்களும் ஆவர்.)
Question 3 |
இந்தியாவில் பொருளியல் வருவாய் ஈட்டும் துறைகள் ___________ ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
2 | |
3 | |
4 | |
5 |
Question 3 Explanation:
(குறிப்பு: மூன்று வகைகள்
முதன்மைத் துறை அல்லது விவசாயத் துறை
இரண்டாம் துறை அல்லது தொழில் துறை
மூன்றாம் துறை சார்புத் துறை அல்லது சேவைத் துறை)
Question 4 |
கீழ்க்கண்டவற்றுள் முதன்மைத் துறையில் அடங்குபவை எவை?
- விவசாயம்
- சுரங்கம்
- காடுகள்
- மீன்வளர்ப்பு
அனைத்தும் | |
1, 2, 4 | |
2, 3, 4 | |
1, 3, 4 |
Question 5 |
- கூற்று 1: இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உழைப்பாளர் குழு பெரும்பகுதி முதன்மைத் தொழிலிலும் சிறிய குழுக்கள் இரண்டாம், மூன்றாம் நிலைத் தொழில்களிலும் ஈடுபட்டுள்ளன.
- கூற்று 2: நன்கு வளர்ந்த நாடுகளில், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள உழைப்பாளர் குழுவின் பங்கு சிறியதாகவும், தொழில் மற்றும் சேவை துறைகளில் ஈடுபட்டிருக்கும் உழைப்பாளர் குழுவின் பங்கு பெரிதாகவும் இருக்கும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 5 Explanation:
(குறிப்பு: இந்திய வளர்ச்சிக் கொள்கையின் ஒரு முக்கியமான கூறாக வேலைவாய்ப்பு இடம்பெற்றுள்ளது.)
Question 6 |
கீழ்க்கண்டவற்றுள் முதன்மைத் துறை தொழில்கள் எவை?
- விவசாயம்
- கால்நடை வளர்ப்பு
- கோழிவளர்ப்பு
- பால் பண்ணை
- மீன்வளர்ப்பு
அனைத்தும் | |
1, 2, 3 | |
1, 3, 4 | |
1, 3, 5 |
Question 7 |
கீழ்க்கண்டவற்றுள் இராண்டாம் துறை தொழில்கள் எவை?
- உற்பத்தி
- சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள்
- கட்டுமானம்
- போக்குவரத்து
அனைத்தும் | |
1, 2, 3 | |
1, 3, 4 | |
1, 3, 5 |
Question 8 |
கீழ்க்கண்டவற்றுள் சார்புத் துறை தொழில்கள் எவை?
- போக்குவரத்து
- காப்பீடு
- வங்கி
- வணிகம்
- தொலைத்தொடர்பு
- வீட்டுமனை விற்பனை
- அரசு மற்றும் அரசு சாரா சேவைகள்
அனைத்தும் | |
1, 2, 3, 6 | |
1, 3, 6, 7 | |
2, 3, 5, 6 |
Question 8 Explanation:
(குறிப்பு: உடல் நலம், வங்கியியல், உணவகம், சட்டம், சில்லறை வர்த்தகம், போக்குவரத்து மற்றும் விநியோகம் போன்றவையும் சேவைத் துறையில் அடங்கும்.)
Question 9 |
1972 - 73 ஆம் ஆண்டுகளில் தொடங்கி கடந்த நான்கு பத்தாண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி, சராசரியாக _________ அளவுக்கு உயர்ந்துள்ளது.
2% | |
3% | |
4% | |
5% |
Question 10 |
வேலைவாய்ப்பின்மை சிக்கலைத் தீர்ப்பதற்காக “வேலைவாய்ப்பு அலுவலகத்தை" அமைத்த டெல்லி சுல்தான்
அக்பர் | |
இப்ராகிம் லோடி | |
பெரோஸ் ஷா துக்ளக் | |
அலாவுதீன் கில்ஜி |
Question 11 |
பதிவு செய்யப்பட்டதும், அரசாங்க விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் பின்பற்றுவதும், ஊழியர்களையும் ஊழியர் சங்கங்களையும் கொண்டுள்ள துறை ____________ எனப்படும்.
ஒழுங்கமைக்கப்பட்டத் துறை | |
ஒருங்கமைக்கப்படாதத் துறை | |
பொதுத் துறை | |
தனியார் துறை |
Question 11 Explanation:
(குறிப்பு: ஒழுங்கமைக்கப்பட்ட துறைக ஊழியர்களுக்குப் பணி பாதுகாப்பு உண்டு என்பதோடு அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்படாத துறையில் இருப்பவரைக் காட்டிலும் அதிக ஊதியம் பெறுகின்றனர்.)
Question 12 |
கீழ்க்கண்டவற்றுள் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள் எவை?
- வங்கிகள்
- ரயில்வே
- காப்பீடு
- உற்பத்தித் தொழிற்சாலைகள்
- மத்திய மாநில அரசு ஊழியர்களைக் கொண்டு செயல்படும் துறைகள்
அனைத்தும் | |
1, 2, 5 | |
1, 2, 3, 5 | |
1, 2, 4, 5 |
Question 12 Explanation:
(குறிப்பு: ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள் சட்டத்திலுள்ள குறிப்பிட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் படி செயல்படுகிறது.)
Question 13 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு. (ஒழுங்கமைக்கப்படாத துறைகள்)
தெருக்களில் விற்பனை செய்வோர், பழுதுகள் சரிபார்ப்போர், சிறிய அளவிலான தொழில்கள் போன்றவை ஒழுங்கமைக்கப்படாத துறைகள் ஆகும். | |
இத்துறைகளுக்கு விதிகளும் ஒழுங்குமுறைகளும் இருந்தாலும் அவை பின்பற்றப்படுவதில்லை. | |
இவற்றில் வேலை செய்வோருக்குக் குறைந்த கூலி கொடுக்கப்படுவதோடு பல நேரங்களில் தொடர்ச்சியாக வேலையும் இருக்காது, பெரும்பாலும் அவர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு, விடுமுறை நாட்கள், மருத்துவ விடுப்பு போன்றவை இருக்காது. | |
இந்த நிறுவனங்கள் அரசாங்கத்தில் பதிவு பெற்றவை. |
Question 13 Explanation:
(குறிப்பு: ஒழுங்கமைக்கப்படாத துறைகள் அரசாங்கத்தில் பதிவு பெற்றவைகள் அல்ல மற்றும் வேலை உத்திரவாதம் கிடையாது.)
Question 14 |
எந்த துறையில் தொழிலமைப்பு முறை சேர்க்கப்படவில்லை?
முதன்மைத் துறை | |
இரண்டாம் துறை | |
சார்புத்துறை | |
தனியார் துறை |
Question 15 |
2011-12 ஆண்டின் வேலைவாய்ப்பில் முதன்மைத் துறையின் பங்கு
27% | |
24% | |
49% | |
74% |
Question 15 Explanation:
(குறிப்பு: 1972 - 73 ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பில் முதன்மைத் துறையின் பங்கு 74% ஆகும்.)
Question 16 |
2011-12 ஆண்டின் வேலைவாய்ப்பில் இரண்டாம் துறையின் பங்கு
27% | |
24% | |
11% | |
15% |
Question 16 Explanation:
(குறிப்பு: 1972 - 73 ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பில் இரண்டாம் துறையின் பங்கு 11% ஆகும்.
Question 17 |
2011 - 12 ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பில் சார்புத் துறையின் பங்கு
15% | |
27% | |
25% | |
23% |
Question 17 Explanation:
(குறிப்பு: 1972 - 73 ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பில் முதன்மைத் துறையின் பங்கு 15% ஆகும்.)
Question 18 |
கீழ்க்கண்டவற்றுள் எவை பொதுத்துறை நிறுவனங்கள்?
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
- இந்திய உருக்கு ஆணையம்
- பாரத தொலைபேசி நிறுவனம்
- டாடா இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை
அனைத்தும் | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 |
Question 18 Explanation:
(குறிப்பு: டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம், அசோக் லேலண்ட், டாடா இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை ஆகியவை தனியார்துறை நிறுவனங்கள் ஆகும்.)
Question 19 |
பொதுத்துறை குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
- சேவை நோக்கம் கொண்டது.
- சொத்துக்கள் அரசாங்கத்துக்குச் சொந்தம்.
- ஊதியம் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 19 Explanation:
(குறிப்பு: மாநில அரசு நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனங்கள், தேசியமயமாக்கப்பட்ட தொழிற்சாலைகள் ஆகியவை பொதுத்துறையில் அடங்கும்.)
Question 20 |
தனியார் துறை குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
- இலாப நோக்கம் கொண்டது.
- சொத்துக்கள் தனி நபர்களுக்குச் சொந்தம்.
- ஊதியம் உரிமையாளரால் வழங்கப்படுகின்றன.
1 மட்டும் தவறு | |
2 மட்டும் தவறு | |
1, 2 தவறு | |
எதுவுமில்லை |
Question 21 |
கீழ்க்கண்டவற்றுள் தற்கால வேலைவாய்ப்பின் போக்குகளாக கருதப்படுபவை எவை?
- அதிகரித்து வரும் சுய-வேலைவாய்ப்பு
- நிறுவனங்கள் ஒரு சில நிரந்தர ஊழியர்களையே பயன்படுத்துதல் மற்றும் குறுகிய கால ஒப்பந்தப் பணிகளைத் தருவதும் ஆகும்.
- மக்களின் வாழ்க்கை முறை காரணமாக பகுதி நேர வேலைவாய்ப்பில் ஒரு வளர்ச்சி இருந்து வருகிறது.
அனைத்தும் | |
1, 2 | |
2, 3 | |
1, 3 |
Question 22 |
இருவேல்பட்டு கிராமத்திற்கு கில்பர்ட் ஸ்லேட்டர் என்பவர் கள ஆய்வு பணிக்காக சென்ற ஆண்டு
1914 | |
1915 | |
1916 | |
1917 |
Question 22 Explanation:
(குறிப்பு: கில்பர்ட் ஸ்லேட்டர் என்பவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்தார்.)
Question 23 |
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு துறைகளில் எந்த இறங்கு வரிசை சரியானது?
முதன்மை துறை, இரண்டாம் துறை, சார்புத் துறை | |
முதன்மைத் துறை, சார்புத்துறை, இரண்டாம் துறை | |
சார்புத்துறை, இரண்டாம் துறை, முதன்மைத் துறை | |
இரண்டாம் துறை, சார்புத்துறை, முதன்மைத் துறை |
Question 24 |
பொருத்துக.
- வேளாண்மை, காடுகள்
- மீன்பிடிப்பு மற்றும் சுரங்கம் i) ஒழுங்கமைக்கப்படாத துறை
- உற்பத்தி, மின் உற்பத்தி, எரிவாயு மற்றும் குடிநீர் விநியோகம் ii) சார்புத்துறை
- வாணிபம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு iii) இரண்டாம் துறை
- குழுமப் பதிவற்ற நிறுவனங்கள் மற்றும் வீட்டுத் தொழில்கள் iv) முதன்மை துறை
i ii iii iv | |
iv iii ii i | |
ii iii i iv | |
iii ii iv i |
Question 25 |
பொதுத்துறை மற்றும் தனியார்துறை என்று எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது?
பணியாளர்களின் எண்ணிக்கை | |
இயற்கை வளங்கள் | |
நிறுவனங்களின் உரிமை | |
வேலைவாய்ப்பின் நிலை |
Question 25 Explanation:
(குறிப்பு: சொத்துகளின் உரிமையாளரையும், சேவைகள் அளிப்பதற்குப் பொறுப்பானவரையும் அடிப்படையாகக் கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படையில் பொதுத்துறை மற்றும் தனியார்துறை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.)
Question 26 |
- கூற்று: ஒழுங்குப்படுத்தப்படாத துறையின் பொருளாதார பண்பு என்பது வீட்டினுள் உற்பத்தி நடவடிக்கை மற்றும் சிறுதொழில் செய்வதாகும்.
- காரணம்: இங்கு குறைவான ஊதியமும் மற்றும் வேலைகள் முறையாக வழங்கப்படுவதில்லை.
கூற்று மற்றும் காரணம் சரி, கூற்றுக்கான காரணம் சரி | |
கூற்று மற்றும் காரணம் சரி, கூற்றுக்கான காரணம் தவறு | |
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று தவறு காரணம் சரி |
Question 27 |
தமிழ்நாட்டில் __________ துறையில் அதிக நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
வேளாண்மை | |
உற்பத்தி | |
வங்கியல் | |
சிறுதொழில் |
Question 28 |
பொருத்துக.
- பொதுத்துறை i) வங்கியல்
- தனியார்துறை ii) கோழிவளர்ப்பு
- முதன்மைத் துறை iii) இலாபநோக்கம்
- சார்புத்துறை iv) சேவை நோக்கம்
ii iii i iv | |
iv iii ii i | |
iv iii i ii | |
iii iv ii i |
Question 29 |
ஸ்லேட்டர் கிராமம் என அழைக்கப்பபடும் இருவேல்பட்டு கிராமம் __________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சேலம் | |
வேலூர் | |
விழுப்புரம் | |
கடலூர் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 29 questions to complete.
Sir, question no 7 check the answer.
You scored 25 out of 29.